Tag » Ambal

Kumbakonam trip

21/10/2011, நான், எனது கணவர், தங்கை, தங்கை கணவர், தம்பி, தங்கை மகன், தங்கை மருமகள் காலை மூன்று நாற்ப்பது மணிக்கு மாயவரம் சென்றோம். முன்பே, ஏற்பாடு செய்த விடுதிக்கு இரண்டு ஆடோக்களில் போய் சேர்ந்தோம். ஆட்டோவிற்கு, நூற்று ஐம்பது ரூபாய் ஆயிற்று. பின் குளித்து, பெரிய கோயிலுக்கு சென்றோம். செல்லும் வழியில், ஒரு சிறிய விடுதியில், காலை உணவை அருந்தினோம். அன்று பதினோரு மணிக்கு, பிள்ளையாருக்கும், முருகருக்கும், அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அதை, முடித்துக்கொண்டு, கொஞ்சம் பிரசாதம், விநியோகம் செய்துவிட்டு, இரண்டு ஆடோக்களில், விடுதி திரும்பினோம். ஆட்டோ செலவு என்பது ரூபாய்.
பிரசாதம் சாப்பிட்டு, ஓய்வு எடுத்தப் பின், திருக்கடையூர், செல்ல பேருந்து நிலையம் சென்றோம். பேருந்து நிலையங்கள், கும்பலாக இருந்ததனால், ஒரு ஷேர் டாக்ஸி பிடித்து, திருக்கடையூர் சென்றோம். அங்கு ஒரு அர்சச்சனை செய்தோம்.
பின் திருவிடைக்கழி சென்றோம். அசுரனை, சம்ஹாரன் செய்த இடம். திருச்சந்தூருக்கு, அடுத்த படியாக முக்கியமான ஸ்தலம். ஸ்தல விருக்ஷம் குரா .அசுரனை சம்ஹாரம் செய்து, விடை கொடுத்த இடம், திருவிடைக்கழி. முருக சந்நிதியின், உள்ளேயே, சிவன் சந்நிதியும் உள்ளது. தேவயானை(முருகர் மனைவி) கொஞ்சம் சாய்ந்த நிலையில் இருப்பாள். அங்குதான் இருவருக்கும், திருமணம் நிச்சயம் ஆனதாகவும், அதற்க்கு முன் அம்பிகை கொஞ்சம் சாய்ந்து முருகனை பார்த்தத்தாகவும் ஐதீகம்.
அங்கிருந்து கிளம்பி, அனந்தமங்களம் சென்றோம். அங்கு ராஜா கோபால பெருமாள், ஆஞ்சநேயர் ஆகியவர்கள் சந்நிதிகள் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் மூன்று கண்களுடனும், பத்து கைகலடுனமும், உள்ளார். அதனால் எவருக்கு, திரிநேத்ரா தசபுஜ ஆஞ்சநேயர் என்று பெயர். ராமர், இராவணனை அழித்த பிறகு, வேறு ஒரு, அரக்கனை அழிக்க வேண்டி இருந்ததாகவும், ஆனால் இராமர் அயோத்தி செல்ல வேண்டி இருந்ததால், ஆஞ்சநேயர் அசுரனை அழித்ததாகவும், கூறப்படுகிறது. அதற்க்கு, சிவன் தனது நெற்றிக் கண்ணைப் போன்று ஒன்று ஆஞ்சநேயருக்கு கொடுத்ததாகவும், பெருமாள் தனது பத்து கரங்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. டாக்ஸி எங்களை பொறையாரில் இறக்கி விட்டது. அங்கிருந்து பஸ் பிடித்து, மாயவரம் சென்றோம். தங்கைக்கு உடல் நலம் சரி இல்லாததால், விடுதிக்கு சென்றார்கள். நாங்கள் ஓட்டலில் உணவை வாங்கிவிட்டு, விடுதிக்கு சென்றோம்.
22/10/2011, காலை எட்டு மணிக்கு, இரண்டு ஆட்டோக்களில் வள்ளலார் கோயில் சென்றோம். அங்கு ஈஸ்வரன் கோயிலில் தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப் படுகிறார். தட்சிணாமூர்த்தியின், நெஞ்சில் சிவலிங்கம் உள்ளதால், அதனால் அங்கு நந்தி உள்ளது. அங்கிருந்து, சேந்தங்குடி துர்க்கை கோயில் சென்றோம்.
காலை உணவை அர்ச்சனா பவன் முடித்துக் கொண்டு, மீண்டும் பெரிய கோயில் சென்றோம். அங்கு, ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் ஏற்பாடு செய்திருந்தோம். இதற்க்கு, ஆட்டோ செலவு, முன்னூற்று ஐம்பது ரூபாய்.
அபிஷேகம் முடிந்து, பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு, மறுநாள் கட்சேரி வாசல் பிள்ளையாருக்கு அபிஷேகத்திற்கு, ஏற்பாடு செய்ய சென்றோம். அதை முடித்துக் கொண்டு, விடுதிக்குத் திரும்பி, பிரசாதம் சாப்பிட்டு, சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டோம். பிறகு டாக்ஸி பிடித்து, ஸ்ரீவாஞ்சியம் போனோம். இங்கு, எமதர்ம ராஜாவிற்கு, தனி சந்நிதி உள்ளது; காசிக்கு சமமான ஸ்தலம். இங்கு, பித்ருக்களுக்கு, தர்ப்பணம் செய்யலாம். மகிஷாசுறமர்தினி சந்நிதி உள்ளது. ஸ்ரீயை(திருமகளை), பெருமாள் ஆசைப்பட்டு(வாஞ்சித்து,), திருமணம் செய்து கொண்ட இடம், அதனால், ஸ்ரீவாஞ்சியம் ஆயிற்று. இங்கு உள்ள, ஈஸ்வரனக்கு, யம தர்மனமே வாகனமாக உள்ளார்.
பின், நன்னிலம் வட்டத்தில் உள்ள, கூத்தனூர் சரஸ்வதி கோயில் அருகில் இருக்கும், ஆதி விநாயகர் கோயிலுக்கு சென்றோம். இங்கு, உள்ள விநாயகருக்கு, தும்பிக்கை இல்லாமல், சாதாரண, தட்சினாமூர்த்தி முகம் போல் இருக்கும். பிரகாரம் சுற்றி வரும் இடத்தில், ராமர், மற்றும் பித்ரு லிங்கங்கள் உள்ளது. ராமர், ஜடாயுவுக்கும், தசரதற்கும், தில தர்ப்பணம் செய்ததாக கூறப் படுகிறது. சுற்றி வரும் இடத்தில், பெருமாள் சந்நிதியும் உள்ளது.
பின், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கு சென்றோம். லலிதசஹஸ்ரநாமம் இயற்றப்பட்ட இடம். அம்பாள், பக்தையின் கனவில் தோன்றி, தனது காலுக்கு கொலுசு வேண்டும் என்று கேட்டு பெற்றுக் கொண்டதாக, கூறப்படுகிறது. பிரண்டை சாதம் விசெஷமான பிரசாதம்.
அங்கிருநது கிளம்பி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்றோம். சாமி தரிசனம் முடித்து, மாயவரம் திரும்பினோம். அங்குள்ள ஒரு உணவு விடுதியில் , உணவு அருந்தி, விடுதிக்கு திரும்பினோம். டாக்ஸி செலவு, ஆயிரத்து ஐநூறு ரூபாய்.
23/10/2011, கட்ச்சேரி வாசல் பிள்ளையாருக்கு, அபிஷேகம் முடித்துக் கொண்டு, காலை பதினொரு மணி ட்ரெயினில், சென்னை கிளம்பினோம். மூன்று நாட்களும் மதிய உணவை பிரசாதத்துடன் முடித்துகொண்டோம்.
21/10/11 பஞ்சாமிர்தம், புளிசாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம்.
22/10/11 பஞ்சாமிர்தம், கேசரி, புளிசாதம், தயிர் சாதம்.
23/10/11 பஞ்சாமிர்தம், தயிர்சாதம் பிரசாதம். பஞ்சாமிர்தத்தை விநியோகம் செய்து விட்டு தயிர்சாதத்தை மதிய உணவுக்கு எடுத்துக் கொண்டோம்.
மாலை 5.45 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

Tourism

Kerala temple visits

15/08/2012: 7:30 pm திருவனந்தபுர மெயிலில், நான் எனது கணவர், எனது கணவரின் மன்னி, எனது தங்கை மற்றும் அவரது கணவர் கிளம்பி திரிசூர் சென்றோம். முதலில் ஏற்பாடு செய்திருந்த கார் டிரைவர் எங்களை தங்கும் விடுதிக்கு அடுத்த நாள் காலை அழைத்துக் கொண்டு சென்றார்.
16/8/2012: குருவாயுரப்பன் கோயிலுக்கு காலை ஏழு அரை மணிக்குள் சென்றதால், எனது கணவரும், தங்கையின் கணவரும் மூத்த குடிமகன் வரிசையிலும் நாங்கள் பெண்கள் வரிசையிலும் சென்றோம்.
மம்மியூர் சிவன் கோயில், வெங்கடாசலபதி கோயில், யானைக் கொட்டாரம் பார்த்துவிட்டு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, திருநாவாய் சென்றோம். கோயில் நடை நான்கு முப்பதுக்கு திறக்கும் என்று சொன்னதால அருகில் இருந்த பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றோம். அங்கு, பராமரிப்பு பணிகள் நடந்ததால்,மாலை ஆறு மணிக்கு நடைத் திறக்கப்படும் என்று தெரியவந்தது; அதனால், திருநாவைக்கு, மீண்டும் வந்தோம். திருனாவை, நூற்று எட்டு திவ்ய தேசத்தில் ஒன்று. கோயில் எதிரில், பாரத புழா ஆறு ஓடுகிறது. ஆற்றின் எதிர் கரையில், சிவன் பிரம்மாவிற்கு கோயில் இருக்கிறது. திருநாவையில், பித்ரு தர்ப்பணம் செய்வது விசேஷம். அங்கிருநது கிளம்பி, திருவித்துவக்கோடு ( நூற்று எட்டு திவ்ய தேசத்தில் மற்றொன்று)பார்த்தோம். பிறகு, திரிசூர் வந்து இரவு உணவை முடித்தோம்.
அடுத்த நாள் (17/8/2012) , காலை ஐந்து முற்பது மணிக்கு வடுகன்னாதன் கோயிலும், பிறகு எதிர் புறத்தில் உள்ள, பரம்க்காவு பகவதி அம்மன் கோயில் பார்த்து விட்டு, காலை உணவை முடித்துவிட்டு, விடுதியை காலி செய்தோம். அங்கிருநது கிளம்பி, திருமூழிக்களம், லட்சுமணக் கோயில் (நூற்று எட்டு திவ்யதேசத்தில் ஒன்று), பார்த்துவிட்டு காலடிக்கு கிளம்பினோம். அங்கு, காலடியில் (ஆதி சங்கரர் பிறந்த இடம்), ஆதி சங்கரர் தாயார் சந்நிதி, சாரதாம்பாள் சந்நிதி, ஆதி சங்கரர் மற்றும் விநாயகர் சந்நிதிகளைப் பார்த்தோம். பின் அங்கிருநது கிளம்பி, திருகாக்கரா( நூற்று எட்டு திவ்ய தேசம்) சென்றோம். இந்த கோயிலில், ஓணம் பண்டிகை உத்சவம் நடக்கும். கோயில் முடியிருந்ததால், சோட்டானிக்கரை, பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றோம். அங்கு நான்கு மணிக்கு, தரிசனம் செய்தோம். பின் அங்கிருநது கிளம்பி, வைக்கம் சென்றோம். அங்கு, பெரிய சிவன் கோயிலைப் பார்த்தோம். அங்கு, வைக்கத்து அஷ்டமி விசேஷமான திருநாள். பின், அங்கிருநது கிளம்பி, கருந்துருத்தி, எட்டுமானூர் ஆகிய சிவன் கோயிலைப் பார்த்தோம். இந்த மூன்று சிவன் கோயில்களையும், ஒரே நாளில் பார்த்தால் விசேஷம். கருந்த்துருத்தியில், மாலை தீபாராதனையும், புஷ்ப அபிஷேகங்களையும் பார்த்தோம். எட்டுமாநூரில், இரவு தீபாராதனையும், சாமி புறப் பாட்டையும் பார்த்தோம். பின், அருகில் இருந்த ஓட்டலில், உணவை முடித்து, அறை எடுத்து தங்கினோம்.
18/08/2012: காலை ஐந்து முற்பது மணிக்கு, அறையை காலி செய்து கொண்டு, பின் குமாரனல்லூர் (கோட்டயம்) அம்மன் கோயிலை தரிசித்தோம். அங்கிருந்து, திருநக்கரை சிவன் கோயிலைப் பார்த்தோம். அந்த சிவன் கோயிலில், நாகலிங்க மரத்தில், தேங்காய் வடிவில், கொத்து கொத்தாக காய்கள் இருந்தது. பின் அங்கிருந்து கிளம்பி பணச்சிக் காடு தேவி கோயில்(தக்ஷிணமூகாம்பிகை) சென்றோம். மூகாம்பிகையிளிருந்து, சரஸ்வதி இங்கு குளிக்க வந்ததாகவும், குடையை கரையில் வைத்துவிட்டதாகவும், குளித்து முடித்தவுடன், அங்கிருநது குடையை எடுக்க முடியாமல் போக மூகாம்பிகை, சரஸ்வதியை அங்கு இருக்க சொன்னதாக, ஐதிகம். சரஸ்வதி அங்குள்ள காட்டுக்குள் இருப்பதாகவும், பிரதிபிம்பம், அந்த குளத்தில் இருப்பதாகவும் ஐதிகம். நல்லக் கல்வியை வேண்டி, பேணா, பென்சில் போன்றவற்றை பூஜை செய்துவிட்டு எடுத்து செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து கிளம்பி, செங்கனாஞ்சேரியில் பெருனா என்ற இடத்தில் உள்ள முருகர் கோயிலுக்கு சென்றோம். அங்கு, முருகர் கையில் உள்ள வேல், தலைகீழாக இருப்பது விசேஷம். பின் அங்கிருந்து கிளம்பி, சக்குளத்து காவு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றோம். அங்கு, சூரிய ஒளியில், அம்மன் ஜொலிக்கிறாள். இதுவரைப் பார்த்த, எந்த சிவன் கோயிலிலும் நவகிரகம், சண்டிகேஸ்வரர் கிடையாது. ஆனால், இந்த கோயிலில் நவகிரகம் இருந்தது. கேரளாவில், எந்த கோயிலிலும், சிவனை முழுவதுமாக சுற்றக் கூடாது; நந்தியில் ஆரம்பித்து, கோமுகி வரையிலும், பின் நந்தி வழியாக கோமுகி வரையிலும், செல்ல வேண்டும்; அதற்காக, கம்பி அல்லது கயிறு போட்டு உள்ளார்கள் அதற்க்குப் பிறகு, திருவண்வன்டூர்(நூற்று எட்டு திவ்யதேசம்) சென்றோம். அங்கு கோயில் மூடீஇருந்தது அதனால், அங்கிருநது கிளம்பி பந்தளம் (ஐயப்பன் பிறந்த ஊர்) சென்றோம். அங்கு, அரண்மனை, திருஆபரணப் பெட்டி, ஐயப்பன் கோயில், யானைக் குளியல், அச்சங்கோயில் ஆறு ஆகியவற்றைப் பார்த்தோம். பின் அங்கிருந்து, கொட்டறக்கார கணபதி கோயில், திருவனந்தப்புரம் செல்லும் வழியில் பார்த்த்துவிட்டு, இரவு உணவை உண்டோம். இரவு பத்து மணிக்கு திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம்.
19/8/12 காலை பத்மனாபா சுவாமி கோவிலுக்கு சென்றோம். பின் பழவங்காடி பிள்ளையார் கோவிலுக்கு போனோம். அங்கு நெறைய சதுர் தேங்காய் உடைத்து கொண்டு இருக்கிறார்கள். கல்யாண மண்டபத்தில் ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு வர்களாவில் உள்ள ஜனார்த்தனன் பெருமாள் கோவிலுக்கு சென்றோம். கோவில் கடற்கரை அருகில் உள்ளது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் முகம் அழகாக சிரித்தபடி இருந்தது. பெருமாள் ஆசமனம் செய்வது போல் வலது கை உள்ளது. அந்த கை பெருமாளின் வாய் அருகில் போனால் உலகம் அழிந்து விடும் என்று நம்பபடுகிறது.
20/8/12 காலை 5.30 மணிக்கு கிளம்பி ஆட்டுக்கா பகவதி அம்மன் கோவில் பார்கக போனோம் .இது பெண்களின் சபரி மலை என்று சொல்லபடுகிறது. மாசி மாதம் நிறைய பெண்கள் கூடி பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். இந்த விழா கின்னஸ் புக் ஆப் வோர்ல்ட் ரெகார்ட்சில் இடம் பெற்று உள்ளது. தீபாராதனை பார்த்து விட்டு கல்யாண மண்டபம் வந்தோம். கல்யாணம் முடிந்தவுடன் பழவங்காடியில் உள்ள மஹா சிப்ஸ் என்ற கடையில் சிப்ஸ் வாங்கிக்கொண்டு சென்னை மெய்லை பிடிக்க கிளம்பினோம். கால் டாக்ஸி சரியாக கிடைக்காததினால் ப்ரீபைட் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.
மொத்த செலவு இரண்டு நபருக்கு rs.9000/- ( கார், ட்ரைன், தங்கும் விடுதி, சாப்பாடு, டீ, காபி, போன்றவை)

Tourism

Slokas for children: ambAl

Ayur dehi danaM dehi vidyAM dehi maheSvari
samastamakilAm dehi dehi me parameSvarI

anyatA SaraNam nAsti tvameva SarnNam mama
tasmAt karuNya bhAvena rakSa rakSa maheSwarI

अायुर् देहि धनं देहि विद्यां देहि महेश्वरि। 39 kata lagi